அன்பறிவு – விமர்சனம்
அன்பறிவு - விமர்சனம்
புதைபொருள் ஆராய்ச்சியிலிருந்து தோண்டி எடுத்த மாதிரி அரதப்பழசான ஒரு கதையில், அபத்தமான காடசியமைப்புகளுடன், அசட்டுத்தனமாக நாயகன் நடித்தால் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம்தான் அன்பறிவு.
ஒரு வேடத்துக்கே ஒர்த் இல்லாத ஹிப்ஹாப் ஆதிக்கு இரட்டை வேடங்கள் கொடுத்து நாயகனாக்கியிருப்பது குருவி தலையில் பனங்காய் வைத்ததைப் போலிருக்கிறது.
கறுப்பு வெள்ளை பட காலத்திலிருந்து காலங்காலமாக வரும் இரட்டை வேட நாயகர்கள் கதையில் அடுத்து என்ன காட்சி வரப்போகிறது என்பதை சுலபமாக யூகிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஜனவரி மாதம் சபரிமலைக்கு போக மாலை போடுவது ஃபேஷனாகி விட்டதுபோல், விவசாயிகளிடம் கார்ப்பரேட் கம்பெனிகள் நிலத்தை வாங்க முனைவதையும், ஜாதி அரசியல் செய்யும் கட்சிக்காரர்களையும் காட்சிப்படுத்துவது தமிழ் சினிமாவில் ஃபேஷனாகி விட்டதால், பழைய மொந்தை...
