Thursday, October 1

Tag: Annapoorni

வெற்றிமாறன், ஜெயம் ரவி வெளியிட்ட “அன்ன பூரணி” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !

வெற்றிமாறன், ஜெயம் ரவி வெளியிட்ட “அன்ன பூரணி” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !

News
Komala Hari Pictures மற்றும் One Drop Ocean Pictures நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் ஒரு அழகான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட...
லாஸ்லியா நடிக்கும் “அண்ணபூர்ணி”!

லாஸ்லியா நடிக்கும் “அண்ணபூர்ணி”!

News
KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் "அண்ணபூர்ணி".  பூஜையுடன் இனிதே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர். த்ரில்லர் டிராமாவாக உருவாகும் அண்ணபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார்.ஒளிப்பதிவு - ஹெக்டர், படத்தொகுப்பு - கலைவாணன், கலை - அமரன், மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM) சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது....