ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட 'அனுக்கிரகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
'அனுக்கிரகன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் 'அனுக்கிரகன்'
திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படமாக 'அனுக்கிரகன்' உருவாகியுள்ளது.
இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார் .அவர் மிராஜ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஸ்டோரி போர்டு உருவாக்குதல் போன்றவற்றைக் கற்றிருக்கிறார்.
திரைப்படப் படப்பிடிப்புகளுக்குச் சென்று நடைமுறை அனுபவத்தையும் உற்றுநோக்கிக் கற்றுக் கொண்டிருக்கிறார். பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு திரைக்கலை கற்றவர் இவர்.
'அனுக்கிரகன் ' படத்தில் கதாநாயகன...

