Friday, October 23

Tag: Anushka48

அனுஷ்காவின் 48-வது படம்!

அனுஷ்காவின் 48-வது படம்!

News
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாள் அன்று (நவம்பர் 7), சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது. காணொலி ஒன்றின் வாயிலாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், ”2013-ம் ஆண்டு மிர்ச்சி திரைப்படத்தில் “அழகு ராணி”-யாக நமது உள்ளங்களை கொள்ளை கொண்டார் அனுஷ்கா. 2018-ல் பாகமதியில் “அச்சமில்லா அரசி”-யாக நம்மை ஆட்கொண்டார். தற்போது, “அரசி” அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். அனுஷ்காவின் 48-வது (#Anushka48) படமான இந்த நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்வீட்டி (அனுஷ்காவின் செல்ல பெயர்),” என்று கூறியுள்ளது. அனுஷ்காவின் பிறந்தநாளன்று செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அவரது ...