Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் குறும்பட போட்டி!
இந்நூற்றாண்டின் தலைசிறந்த இந்தியர், தூய வாழ்வினால் அனைவரின் மனதில் இடம்பிடித்த ஆத்மா Dr. அப்துல்கலாம் அவர்களின் வாழ்வை, அவரது உணர்வுகளை நினைவுகூறும் விதமாக, Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் இளைஞர்களுக்கான உலகளாவிய குறும்பட போட்டியை நடத்துகிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரை, பத்மபூஷன் இசைப்புயல் AR ரஹ்மான் தனது சமூகவலைதள டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இளைய சமுதாயத்தின் மனதில் இடம்பெற்றிருக்கும் Dr.APJ. அப்துல்கலாம் அவர்களின் வாழ்வை, இன்றைய சமூகம் வெளிக்கொணரும்பொருட்டு இந்தக்குறும்பட போட்டிக்காக ஐந்து வித கருக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இளைய கலைஞர்கள் தங்களின் புதிய சிந்தனையில், வித்தியாசமான பார்வையில், அவரை இதன் மூலம் வெளிப்படுத்தலாம். திரு Dr.APJ. அப்துல்கலாம் அவர்களுக்கு பெரும் அஞ்சலியாகவும், அவருக்கு விடியோ வடிவிலான பெரும் ஆத்மார்த்த பதிவாகவும், இந்நாட்டில் அவரை ஆத...
