பேண்டசி த்ரில்லராக தயாராகி வரும் ‘ஆரகன்’!
ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூர்யா ஒளிப்பதிவில், விவேக்-ஜெஸ்வந்த் இரட்டையர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, கவிஞர் சினேகன், இளம் நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், சரண் சக்தி, எழுத்தாளர் பிரபாகரன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப்படத்தின் டீசரை தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் மற்றும் அவரது ச...
