ZEE5 தளத்தில் சாதனை படைத்த அரண்மனை 3’ திரைப்படம்!
அரண்மனை 3’ திரைப்படம், ZEE5 தளத்தில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை, 12 நாட்களில் கடந்து, சாதனை படைத்தது!
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா, ராஷிக்கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம், சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘அரண்மனை 3’ திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில் படக்குழுவினரும், ZEE5 குழுவினரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
ZEE5 நிறுவனம் அடுத்தடுத்து அட்டகாசமான கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து, ரசிகர்களை அசத்தி வருகிறது. இந்த வெற்றி வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம்’ திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது ‘அரண்மனை 3’ திரைப்படமும் இந்த வரிசையில் இ...
