யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் “ஆலீஸ்”
தனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா , தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் "பியார் பிரேமா காதல்" என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.
தற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில்.நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளி இட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி,பியார் பிரேமா காதல் வெற்றி படத்தின் மூலம்
ரசிகர்களின் இதயத்தில் கோலோச்சிய ரைசா வில்சன் "ஆலிஸ்" கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஒளிப்பத...
