உதயநிதி நடிக்கும், “ஆர்ட்டிகள் 15” படப்பிடிப்பு !
நினைவில் நீங்கா, நகைச்சுவை நாயகர் “விவேக்” அவர்களுக்கான அஞ்சலியுடன், நடிகர் உதயநிதி நடிக்கும், “ஆர்ட்டிகள் 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு !!!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “ஆர்ட்டிகள் 15” படத்தின் தமிழ் பதிப்பு, கடந்த 10 நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கியது. இந்நிலையில் இன்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். முன்னதாக படப்பிடிப்பு துவங்கும் முன்னர் மொத்த படக்குழுவும், மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்தியில் வெளியான “ஆர்டிகள் 15” மூல படம், இந்தியா முழுக்கவெ பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், தமிழ் பதிப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இங்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீப காலங்களில் நடிகர் உதயநிதி அழுத்தமான கதைகளில் சிறந்த கதாப்பாத்திரங்களில் தன்னை பொருத்திகொண்டு, ரசிகர்களிடம் நல்ல நடிகர் எ...
