அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் “அருவம்”!
Trident Arts ரவீந்திரன் வழங்கும் சித்தார்த் நடிக்கும் “அருவம்”. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ளது “அருவம்”. எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் பேசிய ...
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியது ...
சித்தார்த்துடன் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அவருடன் நடிப்பது எப்போதும் மகிழ்ச்சியானது. எப்போதும் படங்களில் காதலிக்கும் பையானாக இருப்பார். இந்தப்படத்தில் ஒரு மிடுக்கான ஆண்மகனாக நடித்துள்ளார். காத்ரீன் என் மேல் கோபமாக இருப்பார் ஏனெனில் அவரை கயிறு கட்டி நிறையகாட்சிகளில் தூக்கி, தொங்க விட்டு சண்டைக்காட்சிகள் எட...
