அறிமுக இயக்கத்துக்கு ஆரவாரமான வரவேற்பு; “ரௌத்திரம்” மகிழ்ச்சியில் அரவிந்த்சாமி !
"நவரசா" ஆந்தாலஜி, பெரும் வரவேற்பில் "ரௌத்திரம்" மகிழ்ச்சியில் அரவிந்த்சாமி !
Netflix தளத்தில், தமிழில் வெளியாகியுள்ள "நவரசா" ஆந்தாலஜி தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மனிதர்களின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களின் அடிப்படையில் 9 குறுங்கதைகள் இதில் வெளிவந்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடசத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அரவிந்த்சாமி, முதல் முறையாக இந்த ஆந்தாலஜி மூலம், இயக்குநராக மாறியுள்ளார். கோபத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள "ரௌத்திரம்" பகுதியை அவர் இயக்கியுள்ளார். புதுமையான கதை சொல்லல், அருமையான இயக்கம் என "ரௌத்திரம்" பார்வையாளர்களிடம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. முதல் இயக்கத்தில் உருவான படைப்பு பாராட்டுக்களை குவிப்பதில், மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் இயக்குநர் அரவிந்த்சாமி.
தனது அறிமுக இயக்கம் குறித்து, நடிகர், இயக்குநர் அரவிந்த்சாமி கூறியதாவது...
...

