தனுஷ் வெளியிட்ட ‘அஸ்வின்ஸ்’ பட டீசருக்கு அமோக வரவேற்பு!
தமிழ் சினிமாவில் பெரிய திரைகளில் சொல்லப்படும் தனித்துவமான மற்றும் இணையற்ற கதைகள் மூலம், ‘நல்ல கதைகளை எங்களுக்கு படங்களாக கொடுங்கள், நாங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்’- என்ற சினிமா பார்வையாளர்களின் இந்த மந்திரம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தங்கள் கதை மீது அபாரமான நம்பிக்கை வைத்துள்ள ‘அஸ்வின்ஸ்’ படக்குழு ஒரு வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்களுத் தர உள்ளது. உலகின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் பட வெளியீட்டிற்குப் பிறகு இதன் ஓடிடி உரிமத்தை வாங்கியுள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளது. குறிப்பாக, படத்தின் டீசரை தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் வெளியிட்டு இருப்பது படத்தின் மதிப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது. உயர்தரமான காட்சிகள் மற்றும் சிறந்த ஒலி அமைப்புகள் போன்றவை படத்தின் தரத்தை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தி உ...
