Wednesday, September 30

Tag: aswin ganesh

முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழ் வரிகள்!

முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழ் வரிகள்!

News
கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி என்கிற படத்துக்கு, தயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்களை சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது. ட்ராப் சிட்டியின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி அவர்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தப் படத்தில் முதன்மைத் தனிப்பாடலான, ‘பேரனாய்ட்’ (அச்ச உணர்வு) பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இந்தியாவிலிருந்து இசையமைப்பாளர், பாடகர் ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 6.30 நிமிடங்கள் ஒலிக்கும் பேரனாய்ட் பாடல், ட்ராப் சிட்டி படத்தின் முக...