Thursday, September 24

Tag: ATFIA  2020

ATFIA 2020 விருது வழங்கும் விழா- நேரடி ரிப்போர்ட்!

ATFIA 2020 விருது வழங்கும் விழா- நேரடி ரிப்போர்ட்!

News
பங்குனி 15 ஞாயிற்றுக்கிழமை, சிட்னியில் பிளாக்டவுனில் அமைந்திருக்கும் "போமன்"  மண்டபத்தில் ஆஸ்திரேலிய தமிழ்த்திரை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக ATFIA  2020 விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் திரைத்துறை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக நடந்த முதல் நிகழ்வு இதுதான் எனலாம்,  ஆகவே இவ்விழாவை நிகழ்த்திய நண்பர்  சிட்னி பிரசாத் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும். அரங்கை அடைந்து உள்நுழைந்தோம்,  சிவப்பு கம்பள வரவேற்பு,  ஒலி,  ஒளிப்பதிவு கருவிகளுடன் கலைஞர்களை கேள்விக்கணைகளுடன் வரவேற்றனர் குழுவினர். முடிந்து உள்நுழைந்தோம், மீண்டும் சிவப்பு கம்பளம்,  எம்மை வெண்ணிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேசை நாற்காலியில் அமரவைத்தனர். பொதுவாக,  எம்மவர் நிகழ்வுகளில்,  நிகழ்ச்சியின் பெயர் அச்சடிக்கப்பட்ட பதாகை (Name Banner), மேட...