உலகம் முழுவதும் ரூ.7000 கோடி வசூல் செய்த ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர்
ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உலகம் முழுவதும் பார்வையாளர்களின் நம்பர் 1 தேர்வாக இருந்து ரூ. 7000 கோடி வசூல் செய்துள்ளது; இந்தியாவில் ரூ. 300 கோடி+ GBOC வெறும் பத்து நாட்களில் வசூல் செய்துள்ளது!
இந்தத் தலைமுறை பார்வையாளர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றத் திரைப்படமாக ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உள்ளது. தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இந்தியாவில் வெளியான பத்தே நாட்களில் ரூ. 300 Cr+ GBOC வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ’அவென்ஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘அவதார்’ திரைப்படம் இரண்டாவது மிகப்பெரிய ஹாலிவுட் படமாக இந்தியாவில் உள்ளது.
இந்தியாவில் இதுவரை எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்திற்கும் கிடைத்திராத மிகப்பெரிய வகையில், குடும்பத்தினர் கொண்டாடும் பொழுதுபோக்குப் படமாகவும் பிரம்மாண்டமான காட்சிகளைக் கொண்ட படமாகவும் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்...
