மார்வெல் ஆன்தம் உருவாக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும்.
நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதுவே இந்த படத்தை ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரசிகர்கள் மார்வெல் சூப்பர் ஹீரோக்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் மிகப்பெரிய வெற்றியே இதை பறைசாற்றுகிறது. தானோஸ் கிரகத்திலிருக்கும் மக்கள் தொகையை பாதியாக்க...
