சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு
சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு
தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) - தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும். மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை சைமா 2024 - SIIMA 2024 வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பே...
