“இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்!
டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி.
வரும் பிப்ரவரி 23 அன்று திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், பைரி திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
பைரி திரைப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி பேசும் போது...
அனைவருக்கும் வணக்கம், பைரி என்பது ஒரு வகை கழுகு இனம். புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம் தான் பைரி. இந்த புறா பந்தய கதைக்களன் என்பது என் வாழ்வில் நான் பார்த்து வளர்ந்த வாழ்வியல் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. குறும்ப...

