’பகீரா’ படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
’பகீரா’ படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
நடிகர் பிரபுதேவா நடித்திருக்கும் ‘பகீரா’ திரைப்படம் உலகம் முழுவது நாளை வெளியாக இருக்கிறது. படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள எதிர்பார்ப்பு படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புதிய எண்டர்டெயினர் படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையையும் படக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “’பகீரா’ ரசிகர்களைக் கவரும் அம்சங்களுடன் ஒரு அசத்தல் பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஆரம்பத்தில், நான் ஸ்கிரிப்ட் எழுதும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு என் மனதில் பிரபுதேவா மாஸ்டர்தான் தொடர்ந்து பயணித்தார். கதை எழுதி முடிந்ததும், தயாரிப்பாளர் பரதன் சாரிடம் அவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற என் ஆ...
