அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிக்கும் ‘பன்சூரி’
விஷன் 3 கிளோபல் தயாரிக்க, அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிக்க, ‘பன்சூரி’ திரைப்படத்தை எழுதி, இயக்குவதன் மூலம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார்.
ஒரு 8 வயது சிறுவன் தன்னில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதுவாகவே மாற நினைக்கிறான். அந்த பெருமுயற்சியின் காரணமாக அவனது வாழ்க்கை பயணத்தில் அவன் சந்திக்கும் வெற்றி-தோல்விகள், மகிழ்வுகளும்-இகழ்வுகளும், அவனை எப்படி புடம் போடுகின்றன, இறுதியில் அவன் இலக்கை அடைந்தானா இல்லையா என்பதை பல்வேறு சுவராஸ்யங்களுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும், ஜனரஞ்சகமான ஒரு புதிய பரிமாணத்தில் கதைகளத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், ரிதுபர்னா சென்குப்தா, அங்கன் மாலிக் முன்னணி வேடங்களில் நடிக்க, அவர்களோடு இணைந்து உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், ட...
