எட்டு வருடத்துக்கு முன் எடுத்த படத்தை வைத்து ஏமாற்றலாமா?
நடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் S.P. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் மறுத்துள்ளார் யோகிபாபு. மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது,
"தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போ...
