இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி!
ஸ்ரீ அண்ணாமலையார் முவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி
சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார். தன் ஒரே மகளை கொலை செய்த கொலைகாரனை தேடி அலையும் அசிஸ்டன்ட் கமிஷனராக விக்டர் வருகிறார். இந்த மூன்று கதா பாத்திரங்களையும் இணைத்து சொல்லப்பட்ட இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்யும்.
கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அதில் கற்று தேர்ந்தவர்கள், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியது போய், இன்று அதை பணம் சம்பாதிக்கும் வியாபார தளமாக்கி விட்டனர். சூது கவ்வும் தர்மத்தை, அதனிடமிருந்து மீட்கும் க்ரைம் த்ரில்லர் படமே பேட்டரி. பொத...
