நாள் கணக்கில் ஓடவே நொண்டியடிக்கும் படங்களுக்கிடையே மூன்றாவது வாரத்தை கடந்து வெற்றி நடை போடும் பேச்சிலர்
Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு வழங்க, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், GV பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்” . இளைய தலைமுறையினரிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்படம், விமர்சர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பிரமாண்ட வெற்றியடைந்துள்ளது. இதனையடுத்து இன்று படக்குழு பத்திரிக்கை நண்பர்களை சந்தித்தி நன்றி தெரிவித்தது
இவ்விழாவில் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு தயாரிப்பு தரப்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில்…
நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது…
என்னுடன் நடித்த கலைஞர்கள் எல்லோருக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இயக்குநர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடியுங்கள் கேமராவால் நாங்கள் ஃபாலோ செய்கிறோம் என்றார். இந்தப்படத்திற்கு தான்...
