பிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ!
ராதே ஷ்யாம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. படத்தில் பிரபாஸின் புத்துணர்வு தரும் தோற்றம் ரசிகர்களை சுண்டி இழுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
ஏற்கெனவே ரசிகர்கள் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த நிலையில், இன்று பிரபாஸின் பிறந்தநாள் என்பதால் அதை மேலும் இனிமையானதாக்கும் வகையில் படக்குழு படத்தின் மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது.
அழகியல் ததும்பும் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ரயில் பாதையில் சீறிப் பாயும் ரயிலை காட்சிப்படுத்தி அந்த மோஷன் வீடியோ தொடங்குகிறது. அப்படியே விரியும் காட்சிகள் அந்த ரயிலின் வெவ்வேறு பெட்டியில் பயணிக்கும் விக்ரமாதித்யா, பிரேரனாவின் மீது படர்கிறது. இருவரும் வெவ்வேறு ...
