“நவரசா” ஆந்தாலஜி படத்தில் பணியாற்றியது, என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வு – இயக்குநர் பெஜோய் நம்பியார் !
"நவரசா" ஆந்தாலஜி படத்தில் பணியாற்றியது, என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வு - இயக்குநர் பெஜோய் நம்பியார் !
திரையுலகில் பல பரிசோதனைகள் முயற்சிகள் மூலம், தரமான படைப்புகள் தந்தவர் இயக்குநர் பெஜோய் நம்பியார். தனது குரு மணிரத்னம் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியுடன் "நவரசா" படத்தில் பணியாற்றியது, தனது வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வாக மகிழ்கிறார். இப்படத்திற்காக விஜய் சேதுபதியுடன் இணைந்து, உரையாடல்களை மீண்டும் உருவாக்கியதை, மிகச்சிறந்த தருணமாக கூறியுள்ளார். "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில், கருணை உணர்வை மையமாக வைத்து, "எதிரி" பகுதியினை இயக்கியுள்ளார் இயக்குநர் பெஜோய் நம்பியார். இக்கதையில்
விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழின் முன்னணி ஆளுமைகள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று ...
