மூன்றாவது முறையாக இணையும் நடிகர் கிருஷ்ணா இயக்குநர் சத்யசிவா! !
நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா இணைந்து “கழுகு, கழுகு 2” என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. இப்படத்திற்கு “பெல் பாட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து பெரு வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் பாலிவுட் பேரரசனாக உலாவரும் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
“பெல்பாட்டம்” முந்தைய கால ரெட்ரோ பின்களத்தில் நடக்கும் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸாக ஆசைப்பட்டு, சூழ்நிலைகளின் இடர்பாட்டால் முடியாமல்போய், தனியார் துப்பறிவாளனாக, குற்றங்களை கண்டுபிடிப்பவராக, திவாகர் எனும் பாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்கிறார். கைவிடப்பட்ட குற்ற வழக்கு ஒன்றை விசாரிக்க அந்த வழக்கு &nb...
