திருமணம் ஆனதால் பல படங்களில் நிராகரிக்கப்பட்டேன் – கதாநாயகி துர்கா பேச்சு!
பீட்டர் ராஜின் ப்ரோகன் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் புவன் இயக்கத்தில் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் பழந்தமிழர் களின் மருத்துவம்
சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக "பெல்" உருவாகி யிருக்கிறது.
இதில் குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித் துள்ளனர்.
பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார்.
இப்படம் பத்திரிகை, மீடியா நிருபர்களுக்கு இன்று திரையிடப்பட்டு அவர்களது பாராட்டை பெற்றது.
பின்னர் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பேசினர்.
குருசோமசுந்தரம் பேசியதாவது:
எனக்கு பத்திரிகையா ளராக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஏனென் றால் நான் நிறைய நாவல்கள் படிப்பேன். குறிப்பாக ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்,...

