பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது!
SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து ஒரு புதியபடத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்தேறியது. SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர்களில் பாபிசிம்ஹாவும் ஒருவர். அதனால் அவர் தலைமை பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் தரமான கன்டென்ட்டோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக அழகான நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா.மிக வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்துள்ளார்.
ஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோக இசை மிக முக்கியம். அந்த வகையில் தரமான இசையை வழங்க இருக்கிறார் ராஜேஷ் முருகேசன். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கென பெயர் பெற்ற...
