சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் படம்…!
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளில் இயக்குனர் பாரதி கணேஷ்-ன் புதிய படம் ஆரம்பமாகிறது*
5E கிரியேசன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி மற்றும் சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் ‘நம்பர் 1 புரொடக்சன்’ ஆக உருவாகி வரும் இந்தப்படத்தின் டைட்டிலை வெகு விரைவில் வெளியிட உள்ளனர்.
சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் நடித்த இயற்கை புகழ் நடிகர் ஷாம் நடிக்க உள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த கண்ணுபட போகுதய்யா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய எம்.பாரதி கணேஷ் இந்த படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபு கவனிக்க, படத்தொகுப்பை நாகூர் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார்.
இதில் முக்கிய கதாபாத்தி...
