பிந்து மாதவிக்குப் பிடித்தது தமிழ்ப் படவுலகமா? தெலுங்குப்படவுலகமா?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாக திகழ்பவர் பிந்து மாதவி. தமிழ் பிக் பாசில் கலந்து கொண்டு பரபரப்பாகிய பிந்து மாதவி இப்போது , தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டுள்ளார்.
இதற்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பொழுதே பிந்துமாதவி ஆர்மி என பல டிவிட்டர் மற்றும் #ஹாஷ்டாக்குகள் துவங்கப்பட்டு பரபரப்பாகி வருகிறது.
இப்போட்டியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரபல நடிகர் நாகார்ஜுனா ,
உங்களுக்கு தமிழ் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என்ற கேள்வியை பிந்து மாதவியிடம் கேட்க,
“சார்… இது நல்லது இது நல்லது இல்லனு சொல்ல முடியாது, இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். சென்னைக்கும் எனக்கும் மிக ஆழமான உறவு இருக்கு, சென்னைக்கு என் இதயத்தில் தனி இடம் இருக்கு, சென்னையில் தான் நான் வேலை பார்க்கிறேன், என் த...


