‘பொம்மை நாயகி’ – திரைப்பட விமர்சனம்
'பொம்மை நாயகி' - திரைப்பட விமர்சனம்
டீக்கடையி ல் பணியாற்றும் யோகிபாபு அன்பான மனைவி, அழகான மகள் பொம்மை நாயகியுடன் அன்றாடவாழ்க்கையை எளிமையாகக் கடக்கிறார்.
டீக்கடையை அதன் உரிமையளர் வேறு ஒருவருக்கு விற்க முடிவு செய்ய, யோகிபாபுவின் நலனில் அக்கறை கொண்ட நண்பர் எப்படியாவது பணம் புரட்டி டீக்கடையை உரிமையளரிடமிருந்து விலைக்கு வாங்கும்படி ஆலோசனை கூறுகிறார்.
யோகிபாபுவின் தந்தை ஜி.எம்.குமாருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மகன் அருள்தாஸ். இளைய தாரத்தின் மகன்தான் யோகிபாபு.
தன் தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாலேயே அருள்தாஸ் அவரை வெறுத்து ஒதுக்க, இரண்டாம் மனைவி மற்றும் யோகிபாபுவுடன் குடிசையில் வாழ்கிறார் ஜி.எம்.குமார்.
கோவில் திருவிழா நடக்கும்போது, பொம்மை நாயகி அதே ஊரைச் சேர்ந்த இரண்டு கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். ஊர்ப்பெரியவர்கள் என்ற போர்வையில் இருக்கும்...
