500 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் காமெடி நடிகர்
படத்துல தான் காமெடி பீஸ்.. ஆனா நிஜத்துல 500 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் காமெடி நடிகர் பற்றி தெரியுமா?
சினிமாவில் ஹீரோக்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்கிற பிம்பம் இருக்கிறது. அவர்களுக்கு இணையாக நகைச்சுவை நடிகர் ஒருவரும் சம்பாதித்து உள்ளார் என்று சொன்னால் சற்று ஆச்சர்யமாக தான் இருக்கும். அவர் கோலிவுட்டோ அல்லது பாலிவுட்டை சேர்ந்தவர் அல்ல, தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரம்மானந்தம் தான். இவர் தான் கிட்டத்தட்ட ரூ.500 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் சட்டெனபள்ளி அருகே உள்ள குக் கிராமத்தில் பிறந்தவர் தான் பிரம்மானந்தம். கடந்த 1956-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி பிறந்தார். இவரது தந்தை மரவேலை செய்யும் ஆசாரியாக பணியாற்றி வந்துள்ளார். நடிகர் பிரம்மானந்தத்துக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கோதாவரி மாவட்டத்தில் உள்ள...
