Friday, September 18

Tag: Breaking News

சூப்பர் ஹீரோ அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

சூப்பர் ஹீரோ அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

News
தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார். ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் Movie BREAKING NEWS இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதாநாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்த...
“பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக அமைக்கப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்!

“பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக அமைக்கப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்!

News
நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சிகள் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்டில், மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்… சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது. ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய ஆக்சன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் தானே ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தார். படப்பிடிப்பு முழுவதும் ஜெய் மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்து ஒத்துழைத்ததால், காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது. இத்திரைப்படத்தில் பானு ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில்...
நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

News
நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர உள்ள நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது... படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற, தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் மிக அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பு...
சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்!

சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்!

News
'பிரேக்கிங் நியூஸ்’ என்ற சொல் திரையில் பளிச்சிடும்போதே, என்ன செய்தி என்பதை பார்க்க எல்லோரும் ஒரு நிமிடம் நின்று கவனித்து விட்டு தான் செல்கிறார்கள் என்பது வெளிப்படையானது. இதற்கு எந்த பகுதி, மொழி என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி உள்ளது. அதன்படி, ஜெய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படமும் இந்த சூழலுக்கு உட்பட்டது. அந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமுமே தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது. ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு அதிக வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஹைலைட்டான ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதை படக்குழு உறுதிப்படுத்தினாலும், படத்தின் கதை என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.  படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போ...
“பிரேக்கிங் நியூஸ்” படத்தில் அறிமுகமாகும்  பானுஸ்ரீ!

“பிரேக்கிங் நியூஸ்” படத்தில் அறிமுகமாகும் பானுஸ்ரீ!

News
நடிகை பானுஸ்ரீ மொழி மற்றும் எல்லைகள் கடந்து குறுகிய காலத்தில் மிகவும் பிரபலபமானவர். தமிழிலும் அவரது புகழை பரப்பியிருக்கிறது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2. தற்போது நடிகர் ஜெய் நடிக்கும் "பிரேக்கிங் நியூஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.   "இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம். நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால அதில் அடுக்குகள் இருக்கும். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்" என்கிறார் பானுஸ்ரீ.   நாயகனை பிரிந்து விடுவேன் என அவர் கூறுவதற்கான காரணத்தை பற்றி ஆரவ்த்துடன் கேட்டால், சி...