உலக மோட்டார் சைக்கிள் தினத்தை முன்னிட்டு ‘ப்ரோஸ் ஆன் வீல்ஸ்’ வெளியிடும் ‘பைக்கர்ஸ் கீதம்’!
இந்த ஊரடங்கின்போது ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தி்லோ, அல்லது பல விதமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறோம். குறிப்பாக பைக் ஓட்டிகள், காதுகளில் ரீங்கரிக்கும் மனதிற்கினிய காற்றின் ஒலியை கேட்டு அனுபவிக்கும் சந்தோஷ சூழலை இழந்திருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற ப்ரோஸ் ஆன் வீல்ஸ் அதிகாரபூர்வ அமைப்பு, டேபிள் பார் 4 இசைக் குழுவுடன் இணைந்து 'பைக்கர்ஸ் கீதம்' பாடலை வெளியிடுகிறது. "ஓட்டு", "விளையாடு", "கொண்டாடு", (ரைட் பிளே செலிபரேட்) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கீதம் இவ்வார இறுதியில் (19-06-2020) @brosonwheelsofficial மற்றும் இதர சமூக வலைதளங்களில் வெளியாகிறது.
ப்ரோஸ் ஆன் வீல்ஸ் அமைப்பின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் இந்த நிகழ்வு குறித்து நிறுவனர் சுஜித் குமார் கூறியதாவது...
"மோட்டார் சைக்கிள்களும் ராக் இசையும் பிரிக்க இயலாத அளவுக்கு ஒன்றிணைந்து பயணிப்பதை நான் உணர்ந்திருக்...
