முழுமையான திரை அனுபவத்தைத் தரவிருக்கும் ‘கேப்டன்’ திரைப்படம்!
திரையுலகில் வெகு சில இயக்குநர்களே தங்கள் வழக்கமான படைப்புலகத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை தர முயல்வார்கள். அத்தைகைய தொலைநோக்கு பார்வைக்கொண்ட இயக்குநர்களில் முதன்மையானவராக தன்னை நிரூபித்தவர் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். ஸ்பேஸ் திரில்லராக உருவான டிக் டிக் டிக், வேம்பயர் திரில்லரன மிருதன், உயிருடன் வரும் டெடி பொம்மை சார்ந்த காதல் கதையான டெடி என ஒவ்வொரு படமும் அவருக்கு மட்டுமல்ல தமிழ்படைப்புலகத்திற்கே முற்றிலும் புதிதானது. அந்த வகையில் முற்றிலும் புதிதான களத்தில் ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது
படம் குறித்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறியதாவது…
ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும் அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர...
