நடிகர்ஆர்யா இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் உருவாகும் “கேப்டன்”
பெரு வெற்றி பெற்ற “டெடி” திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இனிதே நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது படக்குழு, படத்திற்கு “கேப்டன்” எனும் டைட்டிலை அறிவித்துள்ளது.
இது குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில்..
“கேப்டன்” எனும் தலைப்பு நேர்த்தியானது, நிஜத்தில் பல விசயங்களில் மிகப்பெரும் மதிப்பை கொண்டிருக்கும் தலைப்பு இது. ஒரு விளையாட்டு குழுவில் ஆரம்பித்து, சமூகத்தின் எந்த ஒரு குழுவிலும், கேப்டன் எனும் பொறுப்பு மிக முக்கியமானது. அது வெறும் தலைமை என்கிற இடம் கிடையாது. மொத்த குழுவையும் வழிநடத்தி செல்லும் கடமை கொண்ட, மிகமுக்கியமான பொறுப்பு. இது அப்படியே படத்தில் ஆர்யா ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். தொடர்ந்து...
