விருது பெற்ற ‘சக்ரவியூகம்’ குறும்படம் திரைப்படமாகிறது!
சந்தோஷ்குமார் ‘க்ளீன் போல்ட்’ குறும்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர்
சந்தோஷ்குமார். அதில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால்
கவனிக்கப்படத்தக்கவராக மாறியதால் தனது அடுத்தடுத்த குறும்படங்களால்
சினிமாக்காரர்களிடம் நெருக்கமாகியுள்ளார். இந்நிலையில் இவர் விஜய்
ஆதிராஜை வைத்து எடுத்த ‘சக்ரவியூகம்’ குறும்படத்துக்கு சமூக
வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து விருதுகள் வாங்கியிருப்பதுடன் பிரபல
சினிமா நிறுவனத்திடமிருந்து படம் இயக்குவதற்கான வாய்ப்பும் வந்துள்ளது.
இந்தத் தகவல் ஆச்சரியமாக இல்லை? ஆனால் அதுதான் உண்மை. சந்தோஷ்குமார்
வெகுவிரைவில் ‘சக்ரவியூகம்’ குறும்படத்தை வெள்ளித்திரைக்காக
இயக்கவுள்ளராம் .
இதுகுறித்து இயக்குநர் சந்தோஷ்குமார் கூறியது, ‘‘எனக்கு சொந்த ஊர்
கோயமுத்தூர். சினிமா பின்னணி எதுவும் கிடையாது. படிச்சது கம்ப்யூட்டர்
சயின்ஸ். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. சினிமா ஒரு ...
