‘சந்திரமுகி 2’ படத்தில் வேட்டையன் வேடத்தில் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்!
'சந்திரமுகி 2' படத்தில் இடம்பெறும் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்கை லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில்- காமெடி திரைப்படமான 'சந்திரமுகி 2' படத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில், ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.
பன்முக ...
