‘காந்தாரா’ ‘அனுமான்’ போன்ற படங்கள் வரிசையில் வரும் படம் ‘ரூபன்’!
"ரூபன்"திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா!
ஏ கே ஆர் ஃபியூச்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஐயப்பன் இயக்கத்தில் (ஏப்ரல் -2024) 20 - ஆம் தேதி திரையரங்கிற்கு வெளிவரவிற்கும் திரைப்படம் "ரூபன்" இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
*இந் நிகழ்வில் இயக்குனர் கணேஷ் பாபு பேசியது ...*
அனைவருக்கும் வணக்கம் சாமி படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆச்சி மீண்டும் இந்த மாதிரி ஒரு நல்ல படம் வருது அப்படிங்க போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
இந்த படத்தை இயக்கிய ஐயப்பன் அவர்களுக்கும் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி.
மியூசிக் ரொம்ப நல்லா இருக்கு எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இந்த படம் இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
*இயக்குனர் மோகன் ஜி பேசியது ...*
ரூபன் த...
