சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு
இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. ஸ்ரீநிவாஸ் என்பது இவரது பெயராக இருந்தாலும் அந்த பெயரில் இன்னும் சில நடிகர்கள் இருப்பதால் சேத்தன் சீனு என மாற்றிக்கொண்டார்.
சேத்தன் சீனுவின் பூர்விகம் தெலுங்கு என்றாலும் இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். சிறுவயதிலேயே இவருக்கு சினிமா ஆர்வத்தை ஏற்படுத்தியது இவரது தந்தை தான்.. அந்த சமயத்தில் அஞ்சலி, சேதுபதி ஐபிஎஸ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சினிமா மீதான கனவு அப்போதே துவங்கி விட்டது என்கிறார் சேத்தன் சீனு.
ஜூனியர் என்டிஆர் நடனம் கற்றுக்கொண்ட அதே மாஸ்டரிடம் நடனத்தையும் பாண்டியன் மாஸ்டரிடம் சண்டையையும் கற்றுக்கொண்ட சேத்தன் சீனு, அப்படியே மாடலிங் பக்கம் கவனத்தை திருப்பினார். மாடலிங் மூலமாக விளம்பரப்பட வாய்ப்புகள் வரவே, கார்...
