வடசென்னையை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம்!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘புரொடக்ஷன் நம்பர் 1’. ’இந்த படத்தை அறிமுக இயக்குனர் சங்கர் சாரதி என்பவர் இயக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குநர்கள் சிலரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷ்னா ஜவேரி நடிக்க,
முக்கிய வேடங்களில் பிரேம், மனோபாலா, சாய்தீனா, ராஜசிம்மன், கராத்தே ராஜா, ராமச்சந்திரன், மீசை ராஜேந்திரன், தீபா, சிங்கம் ஜெயவேல் விஜய் டிவி புகழ் சில்மிசம் சிவா கிரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் ஷைலு ராஜேந்தின் என்பவர் இப்படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகி உள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்று முடிந்த கையோடு உடனடியாக படப்பிடிப்பு...

