அசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி தாகூர் !
ஒவ்வொரு முறை பிரபுதேவா திரையில் தோன்றும் போதும், அது சினிமாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது விளம்பரமாக இருந்தாலும் ரசிகர்களை வசீகரிக்கும் மேஜிக் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அவரது ஸ்டைல், உடை, தோற்றம் அனைத்தும் நவீனத்தின் முன்னெடுப்பாக, அட்டகாச ஸ்டைலில், அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அவரது ஸ்டைலிஸ்ட் ஜாவி தாகூர் தான். முன்னணி ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனராக மும்பையில் பணியாற்றி வரும் ஜாவி தாகூர் தான், கடந்த ஏழு வருடங்களாக பிரபுதேவாவின் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார். பிரபுதேவாவின் தோற்றத்தை முழுதுமாய் மாற்றியமைத்து, நவீன பாணி ஸ்டைலில் அவரை வடிவமைத்து, அனைவரையும் கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான “பஹீரா” படத்தின் டீஸரில் பிரபுதேவாவை அவர் வடிவமைத்திருந்த விதம் பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளது.
இது குறித்து ஜாவி தாகூர் தெரிவித்ததாவ...
