சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜிஆர்டி நிறுவனம்!
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வேலை வாய்ப்பின்றி சிரமப்படும் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கு சின்னத்திரை நடிகர் சங்கம் ஒரு முன்னெப்பை மேற்கொண்டது.அதன் தலைவர் அ. ரவிவர்மா கொடையாளர்களை அணுகித் தமது சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சின்னத்திரை நடிகர் சங்கஉறுப்பினர்களின் கவலையைப் போக்கி கண்ணீரைத் துடைக்கும் வகையில் ஜி.ஆர்.டி நிறுவனம் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நன்கொடையாக நிவாரணப் பொருள்களை வழங்கி இருக்கிறது
ஜி.ஆர்.டி நிறுவனத்தின்
தலைவர் திரு ஜி .ராஜேந்திரன் அவர்களும் நிர்வாக இயக்குநர்கள் திரு ஜி. ஆர். அனந்த பத்மநாபன் மற்றும் திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த நிவாரணப் பொருள்களை சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் அ. ரவிவர்மாவிடம் வழங்கினார்கள்.
இந்த நிவாரணப் பொருட்கள் தொகுப்பில் அர...
