ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கும் ‘சித்திரைச் செவ்வானம் ’
சமுத்திரக்கனி நடிப்பில்,
இயக்குனர் விஜய் எழுத்தில் ,
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்
‘சித்திரைச் செவ்வானம் ’ -
பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல்.
‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ 'மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது.
இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “சித்திரைச் செவ்வானம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன் KL படத்தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் K.G . வெ...
