புதுமுகங்கள் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’
கும்பகோணம் அருகில் தாராசுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும் ஸ்தபதி டாக்டர் ஆர் பிரபாகர் தயாரிப்பில் உருவாகும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இனிதே தொடங்கியது.
பவுடர் திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜியிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், பிரபல யூடியூபர்களான ரவி விஜே மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கும் இப்படத்தில் சிங்கம்புலி , குக் வித் கோமாளி புகழ் சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் சார்பில் கும்பகோணத்தை சேர்ந்த உலக புகழ் பெற்ற ஸ்தபதி ரோட்டேரியன் ...
