நான்கு மொழிகளில் ‘சிகாடா’!
ஒரே கதையுடன், 4 வெவ்வேறு மொழிகளில், வித்தியாசமான 24 ட்யூன்களுடன் ஒரே டைட்டிலுடன் தயாராகும் ஒரு புதிய வடிவிலான பான் இந்தியா படம்*
இசையமைப்பாளர்கள் சிலர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை வெளியே கொண்டுவரும் விதமாக இயக்குநராக மாறும் ஆச்சர்ய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. இதற்கு முன்னதாக இசையமைப்பாளர்கள் எஸ்.எஸ்.குமரன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிலர் டைரக்சனில் இறங்கி முத்திரை பதித்துள்ளனர். அந்த வரிசையில் மலையாளத்தில் எட்டு படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா நான்கு மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’ படத்திற்கு இசையமைப்பதுடன் இப்படத்தின் வாயிலாக இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் 'பான் இந்திய' படமாக ‘சிகாடா’ (Cicada) தயாராகி வருகிறது.
பொதுவாக நான்கு மொழிகளி தயாராகிம்...
