சவாலான கதைக்களத்தை சாமர்த்தியமாக படமாக்கிய ’O2’ ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்! –
வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான ’O2’ மூலம் கோலிவுட் மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நயன்தாரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள ’O2’ திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு, ஊடகங்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மண்சரிவில் சிக்கிக்கொள்ளும் பேருந்து ஒன்று முழுமையாக மண்ணுக்குள் புதைந்துவிட, அதனுள் இருக்கும் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டார்களா இல்லையா, என்பது தான் ’O2’ படத்தின் கதை. மிக வித்தியாசமான அதே சமயம் சவாலான இந்த கதைக்களத்திற...
