Friday, October 23

Tag: CobraFromAugust31

‘கோப்ரா’ குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள்!

‘கோப்ரா’ குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள்!

News
சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான 'கோப்ரா' படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர். தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் அப்படக் குழுவினர், ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்வதுடன், படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிவித்து, படத்தை திரையரங்குகளில் வருகை தந்து காண செய்வதற்கான ' முதல் நாள் முதல் காட்சி உத்தி'யை மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி ஆகிய இடங்களுக்கு பயணித்த 'கோப்ரா' பட குழுவினர், இதன் தொடர்ச்சியாக பெங்களூரூக்கும் சென்றனர். பெங்களூரூவிலுள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான விழாவில் சீயான் விக்ரம், ...