“முருகக் கடவுளை தவறாக சித்தரிக்கவில்லை” – காக்டெய்ல் இயக்குநர் முருகன்!
PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த "காக்டெய்ல்" என்கிற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை.. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் யோகிபாபு முருகன் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை பார்த...
