‘காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா’ நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன?
காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன? - நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்!
அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியை எது விசேஷமானதாக்குகிறது என நிகழ்ச்சியின் நடுவர்கள் கூறுகின்றனர்.
இந்தி மொழியில் வெற்றிகரமான சீஸன்களுக்குப் பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சி காமிக்ஸ்தான், தமிழில் அறிமுகமாகிறது.
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், ரசிகர்களுக்குப் பிடித்த, அமேசானின் அசல் தயாரிப்பான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ட்ரெய்லர், சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தால் வெளியிடப்பட்டது.
ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே இந்த நிகழ்ச்சியின் அறிமுகம். இந்த புதிய நிகழ்ச்சியில், தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் ப...
